Posts

Image
           வெள்ளாளக் கவுண்டர்கள் கூட்டப்  பெயர்களின் காரணங்கள்  நமது கூட்டங்களுக்கான பெயர்கள் உண்டானதற்கான காரணங்களை பல தமிழ் அறிஞர்கள் - கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் திரு ராசு, திரு டி .எம் .காளியப்பன் , திரு  கு . சேதுராமன் , போன்ற இன்னும் பல தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இதுதான் காரணம் என்று எல்லாவற்றுக்கும் பெயர் காரணம் என்று யாரும் உறுதியாகக் கூறாமல் இவ்வாறு இருக்கலாம் என்றுதான் கூறியுள்ளனர். நானும் இயன்றவரை இதுதான் காரணம் என்று பெயர் காரணங்களைக் இங்கு கூறியுள்ளேன்.  கூடுதலாக பல சொற்கள் மருவி சொந்தப் பெயர் இல்லாமல்  வேறு பெயர்கள் கொண்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக புழக்கடை என்ற சொல்லை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள்? அதற்கான பொருளும் பாமரர் அறியார்.  புடக்காலி என்றால் அனைவரும் அறிவர். இது ஒன்று மட்டுமல்ல . ஏராளமான சொற்கள் உள்ளன பட்டியலிட்டால்  அது மட்டுமே ஒரு தனிக் கட்டுரை போல் ஆகிவிடும்.  முக்கியமாக  நம் கூட்டத்தின் பெயர்களில் ஒன்றில் கூட நாம் இன்று வணங்கி வரும் கடவுள்கள் பெயர் ஒன்று கூட இல்லாததை கவனிக்க வேண்டும். பிராமணர்கள்  தங்களை இன்ன கோத